INFOS SMART

Monday, December 1, 2025

கோடைகால காற்றே

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

மனம் தேடும் சுவையோடு ...தினம்தோறும் இசைபாடு ...அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

[Music and chorus]

வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ....

வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ....

தன் உணர்வுகளை மெல்லிசையாக... தன் உறவுகளை வந்து கூடாதோ... இது நாளும் கூடட்டும்... சுகம் தேடி ஆடட்டும்...

இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே....

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

[Music and chorus]

ஏதோ ஒன்றை தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே...ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே...

வெண்மலைஅருவி பன்னீர் தூவி பொன் மலைஅழகின் சுகம் ஏற்காதோ.... இவை யாவும் பாடங்கள்...

இனிதான வேதங்கள்.... இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே....

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

மனம் தேடும் சுவையோடு ...தினம்தோறும் இசைபாடு ...அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

பாடல் வரிகள்: கங்கை அமரன்

படம்: பன்னீர் புஷ்பங்கள்

Saturday, September 20, 2025

தூர் - நா முத்துக்குமார்

வேப்பம்பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில்

தூர்வாரும் உற்சவம் வருடத்திற்கு ஒருமுறை விசேசமாய் நடக்கும்

ஆழ்நீருக்குள் அப்பா முங்க முங்க அதிசயங்கள் மேலே வரும்

கோடங்ககுச்சி, கோலி, கரண்டி,

கட்டையோடு உள்ளேவிழுந்த துருப்பிடித்த ராட்டினம்

வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்

சேற்றுக்குள் கிளறி எடுப்போம் நிறையவே

சேறுடா செறுடா என்று அம்மா அதட்டுவாள்

என்றாலும் சந்தோசம் கலைக்க யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச்சொட்ட

அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா கதவுகளின் பின்னிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள்

கடைசிவரை அப்பாவும் மறந்தே போனார் மனசுக்குள் தூரெடுக்க

 கவிதை : நா முத்துக்குமார்

Tuesday, April 1, 2025

பூந்தளிர் ஆட

பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

சிந்தும் பனி வாடை காற்றில்...

கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள்...

இனி நாளும் சுப காலங்கள்....

பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

காதலை ஏற்றும் கலையின் காற்றும்... நீரை தொட்டு படும் பாட்டு காதில் பட்டதே...

வாலிபநாளில் வாசனை பூவின் வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே...

கொடிகள் ஆசை கூடிய போதும்... கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதேன்...

தேடிடுதே பெண் காற்றின் ராகம் ... பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

பூமலர் தூவும் பூமரம் நாளும் போதை கொண்டு பூமிதன்னை பூஜை செய்யுதே....

பூவிதலாலும்  போன் இதளாலும்  பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே...

பூமழை தூவும் பொன்னிற மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் மிஞ்சுதே...

ஏங்கிடுதே என் ஆசை... எண்ணம்...

பூந்தளிர் ஆட ... பொன்மலர் சூட ....

சிந்தும் பனி வாடை காற்றில்...

கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள்...

இனி நாளும் சுப காலங்கள்....

பாடும் புது ராகங்கள்...

இனி நாளும் சுப காலங்கள்....

படம்: பன்னீர் புஷ்பங்கள்  

பாடல் : கங்கை அமரன்

Sunday, March 30, 2025

மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்

 ஆ ஆ ஆ  ஆ ஆ... ஆ ஆ ஆ ஓ ஆ ஆ ....

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

தொட்டவுடன் சுட்டதென கட்டழகு வட்டநிலவோ... கண்ணே என்கண்ணே....

பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

 தாமரை மேல, நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வெதென்ன....

நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன....

சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்... பூவே உன் வாழ்க்கைதான் என்ன...சொல்.

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

மேடையை போலே... வாழ்கை அல்ல... நாடகம் ஆனதும் விலகிச்செல்ல....

ஓடையை போலே... உறவும் அல்ல... பாதைகள் மாறியே  பயணம் செல்ல...

விண்ணோடுதான் உலாவும் ...வெள்ளிவண்ண நிலாவும்...என்னோடுதான் நீ வந்தால் என்ன....வா...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

தொட்டவுடன் சுட்டதென கட்டழகு வட்டநிலவோ... கண்ணே என்கண்ணே....

பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ  சொல்...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

படம்: மௌன ராகம்.

பாடல் வரிகள் : கவிஞர் வாலி

Friday, February 14, 2025

வா வா அன்பே அன்பே ... காதல் நெஞ்சே நெஞ்சே

 வா வா அன்பே அன்பே ... காதல் நெஞ்சே நெஞ்சே ... உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே அன்பே ... காதல் நெஞ்சே நெஞ்சே ...

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே ... வாழ்கின்றேன் நானே ...

நீயின்றி ஏது பூவைத்த மானே ...

இதயம் முழுதும் எனது வசம்.

வா வா அன்பே அன்பே ...

காதல் நெஞ்சே நெஞ்சே ...

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம் அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே ... பூமாலை நானே ...

சூடாமல் போனால் வாடாதோ மானே

இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே அன்பே ...

காதல் நெஞ்சே நெஞ்சே ...

உன் வண்ணம் உன் எண்ணம்

எல்லாமே என் சொந்தம்

இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே அன்பே ...

காதல் நெஞ்சே நெஞ்சே ...

படம் : அக்னி நட்சத்திரம்

வரிகள் : வாலி