INFOS SMART

Monday, September 16, 2013

ஒளி....

Light and Dark
ஒளி இருக்கும் இடத்திற்கு இருள் வருவதில்லை...
இருட்டு ஒருமுறை கடவுளிடம் சென்று புகார் செய்தது.
" இந்த சூரியன் எப்போதும் என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னை துரத்திக்கொண்டே வருகிறது. சூரியனால் மிகவும் தொல்லைப்பட்டுவிட்டேன். பொழுது விடிந்தால் அது என்னை கட்டிப்போட்டு விடுகிறது. மாலை நேரம் வரும்போது மிகவும் சிரமப்பட்டுதான் நான் அதனிடமிருந்து விடுபட வேண்டி இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் ? ஏன் சூரியன் என்னிடம் பகைமை பாராட்டுகிறது ? என்னை துன்புருத்துவதற்காக அது இரவு பகலாக சுற்றி வருகிறது. அதனிடமிருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா ? சூரியனிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, கண்டித்து வையுங்கள்." என்றது

கடவுள் சூரியனை வரவழைத்துச் சொன்னார் : " நீ ஏன் இருட்டைத் தொல்லை செய்கிறாய் ? இருட்டு உனக்கு என்ன கெடுதல் செய்தது ? எதுவானாலும் என்னிடம் சொல். " என்றார் .

சூரியன் சொன்னது :" என்ன, இருட்டா ? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே. இருட்டைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே ! எங்கே இருட்டு ? அதை என் முன்னாள் வர சொல்லுங்கள். நான் ஏதும் குற்றம் புரிந்திருந்தால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலாவது நான் அதை பார்த்து விடுகிறேன்." என்றது
சரியென்று கடவுள் இருட்டை அழைத்தார். ஆனால் இருட்டால் ஒளி இருக்கும் இடத்திற்கு வர முடியவில்லை. எப்படி வர முடியும் ? ஒளியே இருட்டை தேடி சென்றாலும் இருட்டு மிக மிக தொலைவாக ஓடிவிடும்.
ஒளி என்பது உண்மை. ஒளி என்பது அறிவு. ஒளிதான் அன்பும் திறமையும். இவற்றை தன்னிடம் கொண்டிருக்கும் எவரையும், உலகின் எந்த சக்தியும் தோற்கடிக்க முடியாது நட்புகளே...
நட்புகளே...

நமக்கும் தேவை... குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்..
தினமணியில் படித்ததை எழுதியது சிதம்பரம் திருஞானம்.

Wednesday, September 11, 2013

பாரதி..! ( பாகம் - 1 )



கறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

"மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!
தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!
எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!

Monday, September 2, 2013

தமிழ்

“எங்கிருந்தாலும் நாங்க என்ன செஞ்சாலும்
தமிழோடு தானே எங்க சந்தோசம்... சங்கீதம்“
படம்: தலைவா
பாடல் வரிகள்:நா முத்து குமார்