INFOS SMART

Saturday, December 29, 2012

மழை நீர் சேகரிப்பு

“ நாங்கள் மற்றவர்களைப் போல் பூமியிலிருந்து நீர் எடுப்பவர்கள் அல்ல. “
பூமிக்கு நீர் அளிப்பவர்கள் “ இயற்கை ஞானி நம்மாழ்வார்.

மழை நீர் சேகரிப்பால் பூமியை காப்பாற்றும் முயற்சியில் சேவை மனப்பான்மையுடன் 70 வயதிலும் முயற்சிக்கும் இளைஞன்
“ திரு. கி. வரதராஜன் ( மழை நீர் பொறியாளர் )
தொலைபேசி : 04366-222675 கைபேசி : 94431 52675 7,ஜி.டீ. நகர், திருவாரூர் – 610 001.

வீடியோ பதிவு : http://www.youtube.com/watch?v=_YbGW-LG6sw&feature=player_detailpage
( you tube vikatan tv )

நேற்று உங்களை நனைத்த மழை நீர், முன்பொரு காலத்தில் கிளியோபாட்ரா குளித்த நீராக இருக்கலாம். குற்றாலம் அருவியில் சலசலத்துக் கொட்டும் தண்ணீர், புதைந்துபோன பூம்புகாரில் சாரலாக வீசியிருக்கலாம். இன்று நீங்கள் பருகும் குடிநீர், நாளை தார் பாலைவனத்தில் சிறு மழையாகப் பொழியலாம். இந்தப் பூமி உருவான தினத்தில் இருந்து இப்போது வரை உள்ள நீரின் அளவு ஒன்றுதான். மழையாக, கடலாக, பெருவெள்ளமாக... அதன் வடிவங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், தண்ணீர் பஞ்சமோ ஒவ்வொரு நாளும் புது வடிவம் எடுக்கிறது. இதற்கு எளிமையான, சாத்தியமான தீர்வு ஒன்றை முன்வைக்கிறார் 'மழை நீர் பொறியாளர்’ கி.வரதராஜன்.

''தண்ணீர் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லாத் தண்ணீரைக் கொடுத்திருக்கிறது. கொடுத்துக் கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை'' என்கிறார் வரதராஜன். மழை நீர் சேகரிப்புக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிற இவரின் வயது 69. இதற்காக, தான் பார்த்துக்கொண்டு இருந்த அரசு வேலையை உதறிவிட்டு, தன் வீட்டையே மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றிய மனிதர். தென்னிந்தியா முழுவதும் 2,014 வீடுகளில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து அளித் தவர். திருவாரூரில் இருக்கும் வரதராஜனின் வீட்டுக்குள் நுழைந்தால் எங்கெங்கும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள். விதவிதமான அளவு களில், விதவிதமான வடிவங்களில் நீரால்சூழ்ந்து இருக்கிறது வீடு.

''இந்தத் தண்ணீரைக் குடிங்க...'' என வீட்டு சமையல் அறையில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் பிடித்துத் தருகிறார். அமிர்தம்போல் இருக்கிறது. ''இது ஏழு வருடம் பழைய மழை நீர். இந்த வீட்டில் 1.5 லட்சம் லிட்டர் மழை நீரைச் சேமித்துவைத்து இருக்கிறேன். குடிக்க, சமையல் செய்ய, குளிக்க, துவைக்க... அனைத்துக்கும் இதைத்தான் பயன்படுத்துகிறோம். இதில் இருக்கும் தாது உப்புக்களின் விகிதம், நகரங்களில் விற்கப்படும் 'மினரல் வாட்டர்’ எதிலும் இல்லை. உலக சுகாதார நிறுவனம் 122 நாடுகளில் குடிநீரைப் பற்றி ஆய்வு செய்தது. அதில் இந்தியாவுக்குக் கிடைத்தது 120-வது இடம். அந்த அளவுக்கு நம் ஊர் தண்ணீர் கெட்டுப்போய்விட்டது. நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள தாது உப்புக்களின் கூட்டுத்தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம்தான் இருக்க வேண்டும். இந்தியாவில் இது 1,500 மில்லி கிராமுக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நான் மழை நீரைச் சேகரிக்க ஆரம்பித்த பிறகு, என் வீட்டு நிலத்தடி நீரில் தாது உப்புக்களின் அளவு 675 மில்லி கிராமாகக் குறைந்திருக்கிறது. இந்தியா 120-வது இடத்தில் இருந்தாலும் என் வீட்டுத் தண்ணீர் முதல் இடத்தில் இருக்கிறது'' எனச் சிரிக்கிறார் வரதராஜன். பொதுப்பணித் துறையில் 36 ஆண்டு கள் பொறியாளராகப் பணிபுரிந்தவர், முழு நேரமாக மழை நீர் பொறியாளராக மாறிய கதை சுவாரஸ்ய மானது.

''என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கீழப் பழுவூர். அங்கே 'திருக்குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. அதில் தேங்கும் மழை நீர்தான் மொத்தக் கிராமத்துக்கும் குடிநீர். அதைக் குடித்து தான் நான் வளர்ந்தேன். படித்து முடித்து பொதுப்பணித் துறையில் பொறியாளராக வேலைக் குச் சேர்ந்தேன். திருச்சிதான் எனக்கு தலைமை இடம். கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங் களில் வேலை. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு கிணற்றைத் தேர்வுசெய்து அதன் நீர் மட்டத்தையும் தரத்தையும் தொடர்ச்சியாகப் பரிசோதிப்போம். நாளுக்கு நாள் நீர் மட்டமும் நீரின் தரமும் மோசமாகிக்கொண்டு இருந்தது. அதைச் சரிசெய்வதற் குப் பதிலாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதுடன் எங்கள் வேலை முடிந்துவிடும். மனது கேட்காமல், அந்தந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர்களைச் சந்தித்து, 'உங்க ஊர் தண்ணீர் சரியில்லை. அதைப் பயன்படுத்த வேண்டாம்’ எனச் சொல்வேன். இதனால் எனக்கு எங்கள் அலுவல கத்தில் எதிர்ப்புகள் வந்தன. 'அது உங்கள் வேலை இல்லை. ஆய்வு செய்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்பார்கள். ஆனால் நான், பல்வேறு கிராமங்களுக்கும் சென்று விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்த ஆரம்பித்தேன்.

அப்படிச் செல்லும்போது என் சொந்தச் செலவில்தான் சென்றுவருவேன். யாரிடமும் காசு வாங்க மாட்டேன். எனது வாசிப்பு அனுபவம் மூலம் நிலத்தடி நீர் மாசு மற்றும் குடிநீர் பிரச்னைக்கு மழை நீர் சேகரிப்பே சிறந்த வழி என்று உணர்ந்தேன். இதற்கிடையே கரூர் வட்டம் வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தில் ஆய்வுசெய்த போது, சாயப்பட்டறைக் கழிவுகளால் நிலத்தடி நீர் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அதைப் பற்றி எடுத்துச் சொல்ல அந்த ஊருக்குப் போய்விட்டு அலுவலகம் திரும்பினால், அனுமதி இல்லாமல் சென்று வந்ததற்காக எனக்கு மெமோ கொடுத்தார்கள். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்தேன். தொடர்ந்தும் இடையூறுகள். இதற்கு மேலும் இந்த வேலை தேவை இல்லை என்று 2003-ம் ஆண்டில் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டேன். அதில் கிடைத்த 10 லட்ச ரூபாய் பணத்தைச் செலவழித்து என் வீட்டை மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றினேன். அதன் பிறகு, முழு மூச்சாக இதுதான் என் வேலை'' என்கிற வரதராஜன், மழை நீரைச் சேகரித்துவைக்கும் கொள்கலனுக்காக தமிழ்நாடு முழுக்க அலைந்திருக்கிறார்.

''ராமநாதபுரத்தில் மழை நீரைச் சேகரித்துவைத்து, வருடக்கணக்கில் பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. நேரில் சென்றால், முதுமக்கள் தாழி போன்ற பெரிய பானையில் மழை நீரைச் சேமிக்கிறார்கள். அதில் தேத்தாங்கொட்டை என்ற ஒரு மரத்தின் கொட்டையை அரைத்து ஊற்றி, இறுக்கமாக மூடிவைத்துவிடுகின்றனர். காற்றோ, வெயிலோ உள்ளே செல்வது இல்லை. பிறகு, தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும்போது அதைப் பயன்படுத்துகின்றனர். கொஞ்சமும் அது கெட்டுப்போவது இல்லை. பிறகு, சென்னையில் 'ஐடியல் வாட்டர் ஸ்டோரேஜ் டேங்க்’ என்ற கன்டெய்னர் கிடைத்தது. அது மழை நீரை சேகரிக்கப் பொருத்தமாகவும் வசதியாகவும் இருந்தது.
மழைத் தண்ணீரில் எல்லாவிதமான மினரல்களும் இருக்கின்றன. கூடுதலாக, பூமியில் உள்ள தண்ணீரில் கிடைக்காத பி 12 வைட்டமினும் ஓசோனும் மழை நீரில் இருக்கிறது. அதனால், மழை நீரை நம்முடைய அன்றாடப் பயன்பாடுகள் அனைத்துக்கும் பயன்படுத்தலாம். இதற்குப் பெரிய செலவு ஆகாது என்பதுடன், வீட்டில் எந்தவித மாற்றத்தையும் செய்ய வேண்டியது இல்லை.
மழை பெய்யும்போது மாடியில் பொழியும் மழை நீர், குழாய்களின் வழியே வந்து நாம் அமைத்துஇருக்கும் தொட்டியில் சேகரிக்கப்படும். அந்தத் தொட்டியின் அடியில் கரி, மணல், சிறு கருங்கல் ஜல்லி ஆகிய மூன்றும் வடிகட்டியாகச் செயல்படும். வடிகட்டி வரும் தண்ணீரை வீட்டின் கீழே ஒரு டேங்கில் சேகரித்துவைக்க வேண்டும். அதில் இருந்து குழாய் மூலம் எடுத்து சமையலுக்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். ஒரு மட்டத்துக்கு மேல் நீர் செல்லும்போது தானாகவே பூமிக்குள் சென்றுவிடும். இப்படித் தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீர் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. என் வீட்டில் 8 வருடங்கள் 10 மாதங்கள், 22 நாட்களாக மழை நீர் இருக்கிறது. தரமாக இருக்கிறது. அதேபோல இந்த நீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்பதும் இல்லை. அப்படியே பயன்படுத்தலாம்.

பொதுவாக, ஒரு கிரவுண்ட் நிலத்தில் 850 முதல் 1,000 சதுர அடி வரை வீடு கட்டுவார்கள். அதிகபட்சமாக 1,000 சதுர அடி மேற்பரப்புகொண்ட ஒரு வீட்டில் மழை நீர் சேகரிக்க வேண்டும் என்று வைத் துக்கொள்வோம். அந்த வீட்டில் மூன்று பேர் வசிப்பதாகக் கொண்டால், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் எனில், 9 லிட் டர் தேவை. விருந்தின ருக்கு 1 லிட்டர். மொத் தம் ஒரு நாளைக்கு 10 லிட்டர். நம் ஊருக்கு கோடைக் காலம்மூன்று மாதங்கள். மழை கிடைக் காத இந்த நாட்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமிப்பதுதாம் நம் இலக்கு. அப்படி எனில், 3 மாதங்கள் (90 நாட்கள்) என்பதை 100 நாட்களாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம் 1,000 லிட்டர் மழை நீர் சேகரிக்க வேண்டும். இதற்கான கன்டெய்னர் வாங்க 10 ஆயிரமும், இதர செலவுகளுக்கு 6 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 16 ஆயிரம் செலவாகும். இந்தச் செலவு ஒருமுறை முதலீடுதான். அதுவும் ஒரே வருடத்தில் மழை நீராகத் திரும்பி வந்துவிடும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்தச் செலவும் இல்லாமல் மழை நீரைப் பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வடிகட்டியை மாற்றுவதைத் தவிர, வேறு எந்தப் பராமரிப்புச் செலவும் இல்லை. மின்சார பில்லும் மிச்சமாகும்.

உண்மையில், தொட்டியில் சேகரிக்கும் தண்ணீரின் 10 சதவிகிதத்தைத்தான் நாம் பயன்படுத்துவோம். மீதம் பூமிக்குள்தான் போகும். என் நோக்கமும் கெட்டுப்போன நிலத்தடி நீரை மழை நீரால் சரிசெய்வதுதான். ஆனால், அதை மட்டும் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதுடன், குடிநீர் பிரச்னைக்கும் இது சரியான தீர்வு என்பதால் இரண்டையும் சேர்த்துச் சொல்கிறேன்'' என்கிற வரதராஜன், பயணிகளின் தாகம் போக்கத் தன் வீட்டு வாசலில் ஒரு மழை நீர் - குடிநீர் தொட்டி வைத்திருக்கிறார். அதுபோலவே திருமணங்கள் போன்ற விழாக்களுக்கும் மழை நீரைக் கொடுக்கிறார்.
''இன்று தண்ணீர், தனியார்மயமாகிவிட்டது. நகரங்களில் கேன் வாட்டரை விட்டால் வேறு வழி இல்லை. ஒவ்வொரு மாதமும் கணிசமான பணம் இதற்கே செலவாகிறது. அந்த கேன் தண்ணீர் சுத்தமாகவும் இருப்பது இல்லை. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்கள் முன்பு யாரேனும் நினைத்துப்பார்த்திருப்போமா? மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும். இந்த பூமியை நாசப்படுத்திய நாம்தான் இதைச் சரிசெய்ய வேண்டும். எத்தனை நாட்களுக்குத்தான் நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சிக்கொண்டே இருப்பது? வாருங்கள், இனிமேல் திருப்பிக் கொடுப்போம்!''

நன்றி : விகடன் 7-11-2012

Visit infossmart Classifieds for free advertisments

Thursday, December 27, 2012

தண்ணீர் பேசுகிறேன் ! ! !



அன்புள்ள தமிழக முதல்வருக்கு, நான் தண்ணீர் பேசுகிறேன்!

ஈரமிகு நெஞ்சம் கொண்ட உங்களின் கனிவான கவனத்திற்கு, எனது கருத்தை நானே எடுத்துரைக்கிறேன்.

தண்ணீர் வாக்கியங்களால், தமிழ்நாட்டின் தரைப்பரப்பெங்கும், வளங்களை எழுதிய நான், இன்று வறண்ட குரலில், வகையற்ற நிலையில், என் வறுமையைப் பேசுகிறேன்...

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். இப்போதோ உலகில் என் இருப்பே கேள்விக்குறியாகி வருகிறது.

ஆறுகளாய், ஏரிகளாய், குளங்களாய், வாய்க்கால்களாய் மனிதகுலத்தை வாழ்வித்தேன்.

எனது எல்லா வடிவங்களும், சிதைத்து சீரழிக்கப்பட்டு வருகின்றன.

ஓர் ஆட்சியாளருக்கும், நீராதாரத்துக்குமான உறவு மிகுந்த உயிர்த்தன்மை உடையது.

மன்னராட்சி தமிழ் மண்ணில் நடந்த காலத்திலேயே புலவர்கள் அரசனுக்குப் புகன்ற அறிவுரையில் நீராதாரத்திற்கு நிறைந்த முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

வெள்ளைக்குடி நாகனார் என்ற சங்கப்புலவர் சோழன் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூற இயற்றிய ஒரு பாடலில், வில்லேர் உழவர்கள் அடைகிற வெற்றி, நிலத்தில் பயிர்விளைக்கும் நல்லேர் உழவர்களின் கையில்தான் உள்ளது என்கிறார்.

காட்சிக்கு எளியவனாக, கடமை தவறாதவனாக மன்னன் இருந்தால் மட்டும் போதாது, அரசாங்க ஊழியர்கள் அனைவரிடமும் இக்குணம் இருந்தாக வேண்டும்.

மக்களை வளமாக வைத்திருக்கும் ஆட்சி அழிவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அந்த ஆட்சியை இழந்து வாழ்வதைவிட, தாம் அழிவதே சிறப்பு என்றெண்ணிக் களமிறங்குவார்கள். இத்தகைய மனஉறுதி கொண்ட மக்களை எத்தகைய படைவலிமையினாலும் வெல்ல முடியாது.

ஒரு நாட்டை வளம் கொழிக்க வைக்கும் அரசனைக் காணும் பிற நாட்டவரும், தம் நாட்டையும் இவனே ஆளவேண்டும் என ஆசை கொள்வர். தங்கள் நாட்டில் கிளர்ச்சி செய்து, ஆட்சியை இவனிடமே ஒப்படைப்பர்.

போர் தொடுக்காமலேயே பல தேசங்கள் அவன் குடையின் கீழ் தானாக வரும். உலகம் முழுவதையும் ஒரு குடை கீழ் ஆட்சி செய்ய ஆசைப்படும் அரசன், தன் நாட்டு உழவர்களை உளம் குளிர வைத்திருக்க வேண்டும். உழவர்களுக்கான நன்மைகளை நாள்தோறும் சிந்தித்துச் செய்துவர வேண்டும் என்று பாடுகிறார்.

உழவர் நலன் காக்க, இன்னொரு புலவர் கூறும் உன்னதக் கருத்துகள் இன்று உயிர்ப்பிக்கப்பட வேண்டியவையாய் உள்ளன.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் புலவர் குடபுலவியனார், உழவுத் தொழிலை உயர்த்திப் போற்ற விரும்பும் வேந்தன், நீர் நிலைகளைப் பெருக்க வேண்டும். அது அவனுக்கு நித்திய நன்மைகளையும், நிலையான புகழையும் தரும் என்று அறிவுறுத்துகிறார்.

நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோருயிர்கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரீ யோரீண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே

என்கிறார்.

நீரால் உண்டான உடல்களுக்கெல்லாம், உணவு கொடுப்பவரே உயிர் கொடுப்பவராவர். உடம்பு உணவையே அடிப்படைத் தேவையாகக் கொண்டது. உணவு (உண்டாக்கல்) என்பது நிலத்தோடு நீரைத் தேக்குவது ஆகும். நிலத்தில் நீரைத் தேக்கி வைப்பவர்கள் உடலையும் உயிரையும் ஒன்றுசேர்த்தோர் ஆவர் என்கிறார்.

நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகள், நீதிமன்றங்கள், பத்திரிகைகள் என எதுவுமே இல்லாத, எதுவும் அரசனின் அதிகாரத்தில் தலையிட முடியாத மன்னராட்சி காலத்தில், மக்கள் நலனில் அக்கறை கொண்டு, புலவர்கள் நீர்நிலைகளுக்காக அரசனிடம் வாதாடி வலியுறுத்தியுள்ளார்கள்.

மக்களாட்சியில் நீர்நிலைகளின் நிலை என்ன?

ஆறுகள் அழிக்கப்படுகின்றன. ஆலைகளின் மாசுகள் அவற்றில் அளவின்றிக் கலக்கின்றன.

தோல் தொழிலும், சாயப்பட்டறையும் தொல் தொழிலான விவசாயத்தை அழிக்கின்றன. துள்ளியோடும் நதிகளைத் தூக்கில் போட்டுத் துடிக்கவைத்துள்ளன.

மாதாவின் மார்பை மகவுகளே அறுப்பதுபோல்

ஆறுகளின் மணல் வளத்தை ஆறறிவினரே கொள்ளையடிக்கின்றனர்.

ஏரிகளைக் கொலை செய்து, "ஏரியா'க்கள் ஆக்கிவிட்டார்கள்.

குளமாய் இருந்த இடங்களைக் குப்பைகளால் தூர்த்து நிலமாய் நிமிர்த்திவிட்டார்கள். கண்மாய்களுக்குக் கருத்தடை செய்துவிட்டார்கள்.

வளங்களை எழுதுகிற வாய்க்கால்களோ, வராகங்கள் புரளுகிற சாக்கடைகளாகி விட்டன.

1970-க்குப் பின் அனைத்து நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் தமது திறனை இழந்துவிட்டன. நகர்மயமாக்கமும் அதீதமான நிலத்தடி நீர்ச்சுரண்டலும் பெரும் அபாயமாக வடிவெடுத்துள்ளன. நிலத்தடி நீர் கீழே சென்றதற்குச் செம்மண் வளத்தை வணிகப்படுத்தியதும் ஒரு காரணம் என்கிறது தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை.

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி என்றும், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் போற்றப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் மற்றும் காவிரியின் வரவைக் காலமெல்லாம் எதிர்நோக்கும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகள் இன்று வேளாண்மையின் சமாதிகளாகி வருகின்றன.

காவிரிப் படுகையின் விவசாயம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. கல்வி வளராத காலத்திலேயே, கல்லணையைக் கட்டிய தொலைநோக்கன் கரிகாலன் ஆண்ட பகுதி இது. இங்கோ பரிசாய் விளங்கிய வேளாண் நிலங்கள் இன்று தரிசாய் மாறி வருகின்றன. தரித்திரத்தின் சரித்திரத்திற்கு தமிழகம் இப்போது முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறது.

காவிரிப் படுகையின் சராசரி மழைப் பொழிவு ஆண்டுக்கு 1,173 மில்லி மீட்டர். இதில் கோடை காலத்தில் 266 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. ஆனால் அப்போதைய தேவையோ 663 மில்லி மீட்டர் ஆக உள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்றால் கேரள, கர்நாடக மாநிலங்கள் அதிக மழைபெறும். தமிழகத்தின் தென்மாவட்டங்கள் கணிசமான மழைபெறும். காவிரிப்படுகை பெறும் மழை மிகக்குறைவே.

வடகிழக்குப் பருவக்காற்றின் போது காவிரிச் சமவெளி கனமழை பெறுகிறது. பெய்கிற மழை 529 மில்லி மீட்டர். ஆனால் தேவையோ 361 மில்லி மீட்டர் மட்டுமே.

தென்மேற்குப் பருவத்திலோ ஊரில் மழை இல்லாமல் போகும். வடகிழக்குப் பருவத்தில் மழையால் ஊரே இல்லாமல் போகும்.

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூவும் எல்லாம் மழை

அதிகமாய்ப் பெய்து கெடுப்பதும், அளவாகப் பெய்து வளத்தைக் கொடுப்பதும் மழைதான் என்ற குறளுக்கு காவிரிச் சமவெளிப்படுகையே கண்முன்பு உள்ள உதாரணம்.

1970-ஆம் ஆண்டு வெள்ளக் கட்டுப்பாடு வடிகால் சீர்திருத்தம் என்ற திட்டத்தைத் தமிழக அரசு தீட்டி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மத்திய அரசு இதை ஒப்பவில்லை. ஒப்புதலும் அளிக்கவில்லை. அதன்பிறகு காவிரிப்படுகையின் பாசன மேம்பாட்டுக்கென உருப்படியான திட்டங்கள் எதுவும் வரவில்லை.

குறுவைச் சாகுபடி கருகிப்போய், சம்பா சாகுபடியும் சாபம் வாங்கிய நிலையில் காவிரி விவசாயம் கண்கலங்கி நிற்கிறது. கர்நாடகமும், மத்திய அரசின் நாடகமும் சேர்ந்து தஞ்சை விவசாயியை வஞ்சித்து வருகின்றன. போதிய நீர் இல்லாமல் வேளாண் மக்கள் புழுவாய்த் துடிக்கின்றனர்.

ஆனால் 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காவிரிப்படுகை விவசாயமே மூழ்கி அழுதது. காரைக்கால் என்ற சிறு பகுதியிலேயே வெள்ளச் சேதம் 26 கோடி ரூபாய் என்றும், வேதாரண்யம் பகுதியில் மானா கொண்டானாறு, வனவனாறு ஆகியவை உடைப்பெடுத்ததில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரும், 10 ஆயிரம் ஏக்கர் கடலை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி அழிந்தன என்றும் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை 2005 தெரிவிக்கிறது.

வெள்ளப் பெருக்கால் விளைச்சல் அழிவது ஒருபுறம், நதிநீர் வராத காலத்தில் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படுவதால், கடல்நீர் உட்புகும் அபாயம் மறுபுறம்.

கொள்ளிடத்தில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மேலணைக்கும் கீழணைக்கும் இடையே 15 கிலோ மீட்டர் இடைவெளியில் தொடர்ச்சியாக தடுப்பணைகளைக் கட்டுவதன் மூலம் கடலில் வீணாகக் கலக்கும் நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம். இத்தகைய தடுப்பணைகள் மூலம் 50 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்கலாம்.

ஜூன் முதல் டிசம்பர் வரை பெய்யும் 850 மில்லி மீட்டர் மழை நீரையும் இவ்வணைகள் மூலம் சேமிக்கலாம் என பொதுப் பணித்துறையின் மேனாள் கண்காணிப்புப் பொறியாளர் என்.நடராஜன் கொடுத்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தின் விவசாயமும் கத்திமேல் நடக்கிறது.

பல்லாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்த தியாகத்தின் மீது கட்டப்பட்ட வைகை அணையின் நீர்ப்பிடிப்புத் திறனும், கொள்ளளவும் பெருமளவு குறைந்து விட்டதாக நிபுணர்கள் அறிக்கை கவலை தெரிவிக்கிறது. காரணம், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை, மனிதன் கெடுத்ததால் மழை வெள்ளப் பெருக்கு மண்ணை வாரிக்கொண்டு வருகிறது. இதனால் அணையின் கொள்ளளவு குறைகிறது.

வைகை ஆற்றுநீர் கண்மாய்களைத் நிறைத்து மீண்டும் ஆற்றுக்கே திரும்பும் வகையில் அருமையான கட்டமைப்பைக் கொண்டது.

கண்மாய்கள் காலங்காலமாய் கண்டுகொள்ளப் படாததால் நீரை சுவாசிக்கும் கண்மாயின் பாதைகள் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டன.

சன் பேப்பர் மில்ஸின் கழிவு தாமிரபரணியைத் தாக்குகிறது.

சதர்ன் இந்தியா விஸ்கோஸ் நிறுவனத்தின் கழிவு பவானி ஆற்றைப் பாழாக்கியது. (விவசாயிகளின் போராட்டத்தால் விஸ்கோஸ் 2001-இல் மூடப்பட்டது).

சாயப்பட்டறைகள் நொய்யல் ஆற்றைச் சாகடித்து வருகின்றன.

ஆற்று நீரை முறையாகத் தேக்கவும், மாசில்லாமல் காக்கவும் முயற்சிகள் இல்லை. ஏரி நின்ற இடங்களில் எல்லாம் கட்டடங்கள் ஏறி நிற்கின்றன. அரசாங்கக் கட்டடங்களும் இதில் அடக்கம்.

குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்களின் எண்ணிக்கை அதிவேகமாகக் குறைந்து வருகின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் நீர்நிலைகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறதே அன்றி கூடவில்லை.

"ரியல் எஸ்டேட்' கொடுந்தொழிலால், வேளாண் பூமிகள் திட்டமிட்டு தரிசு நிலங்களாக்கப் படுகின்றன.

விளை நிலங்கள் எல்லாம் விலைநிலங்களாகி விட்டால், சோற்றுக்கு எங்கே போவார்கள் என்று தெரியவில்லை.

அன்னியச் செலாவணி மோகத்தில், இறால் பண்ணைகளை அமைத்து, விளைநிலங்கள் விஷமாக்கப்பட்ட கொடுமையை விளக்கப் பக்கங்கள் போதாது.

மழைநீர் சேகரிப்பு என்ற மகத்தான திட்டத்தைத் தந்த முதல்வரே, காவிரிக்காக கர்நாடகத்தோடு போராடி வருகிறீர்கள். கர்நாடகத்திலும், கேரளத்திலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிரெதிர் துருவங்கள் ஒன்றுசேர்ந்து தமிழகத்தின் உரிமையை மறுப்பது குறித்து கருத்துக் கூறும் அளவுக்கு எனக்கு அரசியல் தெரியாது.

என் மீது எதையும் எழுத முடியாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என் மீது தான் பிரிவினை அரசியலை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியாத என்னை வைத்து மக்களைப் பிரிப்பது அரசியல் சாணக்கியர்களுக்கு தண்ணீர் பட்ட பாடு...

இதயத்தில் ஈரமும், இயல்பில் வீரமும் உங்களுக்கு உண்டு.

தமிழகத்தின் நீர்நிலைகள் மீதும், நீர்வளத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள். நீரை விற்பனைப் பொருளாக்கும் அபாயத்தைப் போக்குங்கள்.

நீரின்றி அமையாது உலகு என்ற நிலைமாறி, நீரின்றி அமையாது உலக அரசியல் என்னும் நிலை வந்துவிட்டது.

நீங்கள் என்னைப் பாதுகாத்தால் நானும் உங்களைப் பாதுகாப்பேன்.

வாக்குரிமை இல்லாத என்னை,

வழக்கமான அரசியல்வாதி போல,

அலட்சியப்படுத்தி விடாதீர்கள்

வாக்குரிமையினும் சிறந்தது

வாழ்வுரிமையல்லவா?

இப்படிக்கு

தங்களின் நடவடிக்கையைத் தாகமுடன் எதிர்பார்க்கும் தண்ணீர்.

நன்றி. தினமணி

By ஜெ. ஹாஜாகனி

Visit infossmart Classifieds for free advertisments

Saturday, December 15, 2012

கடல் பட பாடல் வரிகள்.....

சித்திரை .. நிலா.. ஒரே நெலா…

பறந்த...வானம்...படச்ச கடவுள்..எல்லாமே...ஒத்தையிலெ...நிக்குது டே...

நீ கூட ஒத்தையிலெ..நிக்கிர டே...

எட்டு வை மக்க...

எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...



சித்திரை நிலா.. ஒரே நெலா…

பறந்த....வானம்...படச்ச கடவுள்..எல்லாமே...ஒத்தையிலெ...நிக்குது டே...

நீ கூட ஒத்தையிலெ..நிக்கிர டே...

எட்டு வை மக்க...

எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...



மனிதன் நினைதால் வழி பிறக்கும்...

மனதில் இருந்து ஒளி பிறக்கும்....

புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால்தான் பூமியும் கூட தாள் திறக்கும்...

எட்டு வை மக்க...

எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...



கண்களிருந்தே காட்சிகள் தோன்றும்.

களங்களிருந்தே தேசங்கள் தோன்றும்

துயரத்திலிருந்தே காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால் விளக்கொன்று …..சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்..

சித்திரை நிலா.. ஒரே நெலா…
எட்டு வை மக்க...
எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...
மரமொன்று விழுந்தால் மறுபடி தளைக்கும்

மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் ?


பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால் தேன் துளி இருக்கும்....

மரமொன்று விழுந்தால் மறுபடி தளைக்கும்
மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் ?


பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால் தேன் துளி இருக்கும்
நதிகளைத் திறந்தால் கழனிகள் செழிக்கும்

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்.
நதிகளைத் திறந்தால் கழனிகள் செழிக்கும்

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்.

சித்திரை நிலா.. ஒரே நெலா…
சித்திரை நிலா.. ஒரே நெலா…

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்
அதோ.... அதோ...ஒரே...நெலா....
  

பாடல்: கவிஞர் வைரமுத்து (தண்ணீர் தேசம்)


Visit infossmart Classifieds for free advertisments

Sunday, December 9, 2012

விஸ்வரூபம் பட பாடல் வரிகள்: பாடல் - 2

துப்பாக்கி எங்கள் தோழிலே

துர்பாக்கியம் தான் வாழ்விலே

எப்போதும் சாவு நேரிலே

எப்போது வெல்வோம் போரிலே



போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை

போர் தாம் எம்மை தேர்ந்தெடுத்க்கொண்டது

எங்களின் கையில் ஆயுதங்க‌ள் இல்லை

ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது…

ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்...

சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்…



ஒட்டக முதுகின் மெல் ஒரு சமவெளி கிடையாது

டாலர் உலகதில் சம தர்மம் கிடையாது..

நீதி காணாமல் போர்கள் ஓயாது...



துப்பாக்கி எங்கள் தோழனே...

தோழ் கொண்ட வீரன் தெய்வமே...



எப்போதும் எங்கள் கோப்பையில் தேனீரு பருகும் மரணமே..



பூமியை தாங்க‌..கொஞ்ச நேரம் கேட்கின்றோம்...

புயலை சுவாசிக்க ஒரு இதயம் கேட்கின்றோம்...

எக்கு திசைகளாய்..ஒரு உதயம் கேட்கின்றோம்...

இறுனூறாண்டு இளமை கேட்கின்றோம்...



துப்பாக்கி எம் தலையணையாய்...தூங்கி திரிகின்றொம்

தோழோடு எம் மரணத்தை தூக்கி திரிகின்றொம்…



ஒட்டக முதுகின் மெல் ஒரு சமவெளி கிடையாது

டாலர் உலகதில் சம தர்மம் கிடையாது..



நீதி காணாமல் போர்கள் ஓயாது...

Visit infossmart Classifieds for free advertisments