INFOS SMART

Wednesday, June 20, 2012

பேசுகிறேன்......

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா


கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா...

படம் : சத்தம் போடாதே
பாடல்
: பேசுகிறேன்
இசை
: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:
நா.முத்துகுமார்
பாடியவர்கள்
: நேகா பேஷின்

Visit infossmart Classifieds for free advertisments

போர்களம்......

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓ! கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓ! ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓ! கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓ! கண் மூடிக்கொண்டால்ஓஓஓஓஓஓ

போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓ! அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓ! இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓ! மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓ! அந்த கடவுளை கண்டால்ஓஓஓஓஓஓ

"
அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்"
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓ! பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஓஓஓ! பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
ஓஓஓ! கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஓஓஓ! மறு பிறவி வேண்டுமாஓஓஓஓஓஓ


பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
படம்: புதுப்பேட்டை

Visit infossmart Classifieds for free advertisements

Wednesday, June 6, 2012

மிருகம்.......


உனக்குள்ளே மிருகம்
 தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்

கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுக்கும்

எரிக்காமல் தேனடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வலி அதுதான் உயிர் பிழைக்கும்…
இதுவரையில் இயற்கையின் விதி இது தான்

நரகம் அதில் நியும் வாழ்ந்தால்
மிருகம் என மார வேண்டும்..
பலி கொடுத்து பயமுருத்து...
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து...

உலகமது உருண்டையில்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை  நிமிர்த்து

இங்கு நண்பன் யாரும் இல்லையெ
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையெ
இனி நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே

வலி அதுதான் உயிர் பிழைக்கும்…
இதுவரையில் இயற்கையின் விதி இது தான்

முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி
 மறுபடியும் மரண அடி

அடிக்கடி நீ இறக்க வேண்டும்…
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ இரு விழியும் திறந்தபடி

இனி நீதான் உனக்கு தொல்லையே
என்றும் நீதான் உனக்கு எல்லையே
நீ தொட்டாய் கிழிக்கும் முல்லையே
வலிகள் இருந்தும் வலிக்கவில்லையே…

வலி அதுதான் உயிர் பிழைக்கும்…
இதுவரையில் இயற்கையின் விதி இது தான்

பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
படம்: பில்லா 2

Visit infossmart Classifieds for free advertisements