INFOS SMART

Saturday, September 10, 2016

குற்றம் 23



முகம் தெரியா உயிர் துடிக்க... முகம் திரும்பிச்ச் செல்வது குற்றம் தான்….
நண்பன் விழி கசிகையிலே உன் நழுவல் குற்றம் தான்….
நீதிமன்றம் சொல்வது மட்டும் குற்றமில்லை…
நெஞ்சம் சொல்லும் நியாயத்தை கேளடா….
வாழெடுத்து கொல்வது மட்டும் குற்றமில்லை வார்தைகளால் கொல்வதும் குற்றம்தான்….
உன்னை நம்பிவரும் பெண்ணையே நிர்கதியாய் விடுதல் குற்றம்
உன்னை உயிராக்கிய பெற்றோரை மறத்தல் குற்றம்…
நெற்றிக்கண் திறந்தால்கூட குற்றம் குற்றம் குற்றம்தான்…
குற்றத்தின் தோழன் ஆசை…
குற்றத்தின் வாசல் கோபம்...
குற்றத்தின் பலனே பாவம்….
குற்றங்கள் வாழவின் சாபம்….
அறிவுகளின் கூச்சல் குற்றம் மெய்மறக்கும் ஆன்மீகத்தில்….
அளவெடுத்த வார்த்தை குற்றம் நண்பர்கள் கூடாரத்தில்….
பிறன்மனை நோக்குதல் குற்றமே…
பிரிவினை பேசுதல் குற்றமே…
நட்பினை தொலைப்பது போலவே கடமையை மறப்பதும் குற்றமே… குற்றமே…
ஒவொருவன் குற்றத்திற்கும் …. அவனுக்கென நியாயம் உண்டு….
இறுதியாய் காலம் சொல்லும் நியாங்கள் சபையில் உண்டு…
மனிதரை ஏவிவிட்டே தான் … மனிதனை கொல்கிறானே மனிதன்…
ஏதுமற்று அழுவோருக்கெல்லாம் இறைவன் தானே கூலி படைத்தலைவன்…

படம்: குற்றம் 23
பாடல்வரிகள்: விவேகா