INFOS SMART

Monday, February 25, 2013

மரங்கள் இருந்தால் தான் மனிதனுக்கு மறுவாழ்வு ...



தல விருட்சம்   
உருவம் இல்லாத இறைவன் ஆரண்ய ரூபியாக இருக்கிறான் என்று ஐதீகம் கூறுகிறது. எந்த மரத்தையும் அழித்து விடக் கூடாது என்பதற்காகத்தான், மனிதன் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மரத்தை கொடுத்து கடவுளின் மறு உருவங்களாக எண்ணி மரங்களை வழிபட்டு வந்தனர். வைணவ ஆச்சாரியர்கள் திருத்தலங்களில் வளர்கின்ற மரம்,செடி,கொடிகளை, கடவுளின் அடியவர்களாக நினைத்து வணங்கினர். 'இறைவா...திருவேங்கட மலையில் நான் ஒரு செம்பகமரமாக வேண்டும்' என்று குலசேகர ஆழ்வார் பெருமாளை வேண்டி நின்றார்.

சங்க இலக்கியங்களில், சில மரங்கள் கடவுளின் மரமாக கூரப்படுகிறது. புன்னை மரத்திலும், ஆலமரத்திலும் கடவுள் வாழ்வதாக அகநானூறும்,நற்றிணையும் கூறுகிறது.வேப்பமரம் காளியின் மரமகவும், கருமாரியின் மரமாகவும் போற்றப்படுகிறது. அதர்வன வேதம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரத்தை ஒதுக்கியுள்ளது. பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, குபேரன், ஆகியோருக்கு ஆலமரமும். ராமன், நாராயணன் ஆகியோருக்கு துளசியும். சிவன், துர்க்கை, சூரியன் ஆகியோருக்கு வில்வமரமும், கிருஷ்ணனுக்கு கடம்பமரமும், கோவிந்தனுக்கு மாமரமும், வனதேவதைக்கு அரசமரமும், இந்திரனுக்கு அசோகமரமும் குறிப்பிடப்படுகிறது. இதன் அடிபடையில் தான், கடவுளுக்கு உரித்தான மரத்தின் இலை,பிரசாதமக வழங்கும் பழக்கம், வழக்கத்தில் இருந்து வருகிறது. வைணவ கோவில்களில்,துளசியும், சிவன் கோவிலில் வில்வ மரத்தின் இலைகளும் வழங்கப்படுகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பனம் பூ, அத்தி பூ, வேப்பம் பூ, ஆகிய பூக்களை, தங்களின் அரச அடையாளமாக பயன்படுத்தினர். 'காவல் மரம்' வளர்த்து வணங்கினர். அந்த மரத்தை, மன்னனுக்கு உரிய அனைத்து மரியாதையும் அளித்து மக்களும் வணங்கினர். அந்த தெய்வீக பண்பாட்டின் தொடர்சியாகத்தான், நாம் கோவில் முற்றத்தில் உள்ள தல விருச்சத்தை தொட்டு வணங்குவதும், வீட்டு மாடத்தில் உள்ள துளசியை சுற்றி வணங்குவதும்.

நீர், நிலம்,காற்று அத்தனையும் விஷமாகிப் போன இந்த விஞ்ஞான பூமியில், மரங்கள் இருந்தால் தான் மனிதனுக்கு மறுவாழ்வு என்ற நிலை உருவாகி இருக்கிறது. சுக்கிர நீதி என்ற பழங்கால சட்ட நூல், அரசனுக்குரிய கடமைகளை வரையறுத்து கூறுகிறது.அதில், அரசன் என்னனென்ன மரங்களை எங்கெங்கு நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.



அத்தி, அரசு, ஆல், புளி, மா, சந்தனம், எலுமிச்சை, வெண்கடம்பு, அசோகம், மகிழம்,கடவிளம், சிந்தில் விளா, இராசாதனம்,புன்னை,பூவரசு,செம்பகம், கடம்பு, கோகாமிரம், சரணம், மாதுளை, கரு, பிடகம், நாரத்தை, சிஞ்சபம்,சிம்பு,இலந்தை, வேம்பு, பாலை,பேரீந்து, புன்பு,பேயந்தி, நெல்லி,தாமலம்,சிம்பலம்,மலையத்தி வெள்ளிக்கொடி,கழுகு, கொம்மபட்டி,தெங்கு, வாழை,மலைஅத்தி, தேக்கு, கொங்கு,பெருவாகை,வெளவுவம், தமாலம், ஆக்கா,  வெட்டபாலை,வெள்வேல்,மருது, புரசு, எழிலைப்பாலை,வன்னி,நந்தி,காஞ்சிரை,குமில்,பங்கம்பாலை,திந்துகம்,பீசகாரகம்,கிடு,சம்பாகம்,இலுப்பை, போன்ற நல்ல பழங்களையும்,நறுமணம் தரும் மலர்களையும் தரக்கூடிய மரங்களை,கிராமங்களில், நகரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்க்க வேண்டும் என்று சுக்கிர நீதி கூறுகிறது.


நன்றி தினமலர் 

Check http://www.infossmart.com/ for classifieds

Visit infossmart Classifieds for free advertisments